அறிவிக்கைகள்

தொடர்புக்கு

1800 425 1002

(கட்டணமில்லாத் தொலைபேசி)

இணையவழி விண்ணப்பிக்கும் முறை

  1. முதலில் விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் வலைதளமான www.tnpscexams.net -ஐ தெரிவு செய்ய வேண்டும்.
  2. இணைய வழி விண்ணப்பப்படிவத்திற்குள் செல்ல "Apply Online" என்ற கலத்தை அழுத்தவும்.
  3. விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவி (அ) பணித்தொகுதியை தெரிவு செய்யவும்.
  4. விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே தனிப்பட்ட அடையாள எண் வைத்திருப்பின் (Unique ID) அவ்விண்ணப்பதாரர்கள் தங்களின் தனிப்பட்ட அடையாள எண், மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி தங்கள் விண்ணப்பித்த சுயவிவரங்களை பார்த்துக் கொள்ளலாம். தேவையிருப்பின் ஏதேனும் மாற்றங்களும் செய்து கொள்ளலாம்.
  5. தனிப்பட்ட அடையாள எண் இல்லாத விண்ணப்பதாரர்கள் இணைய வழி விண்ணப்பப்படிவத்திலுள்ள எந்த கலங்களையும் தவிர்க்காமல் அனைத்து கலங்களையும் பூர்த்தி செய்தல் வேண்டும்.
  6. விண்ணப்பதாரர்கள். புகைப்படம் மற்றும் கையொப்பத்தை நகலெடுத்து(Scan) மற்றும் பதிவேற்றம் செய்வதற்காக கொடுக்கப்பட்ட வழிமுறைகளை பயன்படுத்தி புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். புகைப்படம் மற்றும் கையொப்பம் பதிவேற்றம் செய்யப்படாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் முழுமை பெற்றதாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.