green
merron
blue
brown
Blue
+
R
-

தேர்வாணையம் குறித்து

தொடர்புக்கு

1800 425 1002

(கட்டணமில்லாத் தொலைபேசி)

சீர்திருத்தங்கள்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு முறைகளில் முழு வெளிப்படைத் தன்மையினை உறுதி செய்திடவும், பணி நியமனம் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்திட தேர்வாணையம் புதிய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி உள்ளது.

விடைகள்

  • தேர்வு முடிவடைந்த பின்னர் கொள்குறி வகையைச் சார்ந்த தேர்வுகளுக்கான விடைகள் உடனடியாக தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.
  • தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்களுக்கு இவ்விடைகள் குறித்து ஏதேனும் மறுப்பு இருப்பின் அது குறித்த கோரிக்கைகளை ஏழு நாட்களுக்குள் தேர்வாணையத்திற்கு தெரிவிக்க கால அவகாசம் அளிக்கப்படும்.
  • அக்கோரிக்கைகள் கூர்ந்தாய்வுக்காக வல்லுநர் குழுவிடம் அளிக்கப்பட்டு, சரியான இறுதி விடைகள்  அனைத்து தெரிவு பணிகளும் முடிவடந்தவுடன் தேர்வாணையத்தின் இணையதளத்தில் மீண்டும் வெளியிடப்படும். இவ்விடைகளைக் கொண்டு, தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் தாங்கள் எழுதிய விடைகளோடு ஒப்பிட்டு மதிப்பீடு செய்துகொள்ள ஏதுவாக அமையும்.
  • இத்தகைய முறை தேர்வாணையத்தின் நடவடிக்கைகளின் வெளிப்படைத்தன்மையினை உறுதிப்படுத்தும்.

தேர்வுகள்

  • தேர்வுக்கூடங்களில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு அனைத்துத் தேர்வு மையங்களும் ஒளிப்பதிவு கருவிகளின் வழியாக கண்காணிக்கப்படுகிறது.
  • வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்யும் வகையில் நேர்காணல் தேர்வின் அனைத்து நடவடிக்கைகளும் ஒளிப்பதிவு செய்யப்படுகிறது.
  • மாற்றுத் திறனாளிகளின் வசதியினை கருத்தில்கொண்டு அனைத்து தேர்வுக்கூடங்களிலும் மாற்றுத் திறனாளிகள் தரைதளத்திலேயே தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார்கள். தேவைப்படின் தேர்வு எழுதுவதற்கு உதவியாளர்களும் நியமிக்கப் படுவார்கள்.

ஆண்டுத் திட்டம்:

    தேர்வாணையத்தின் ஆண்டுத்திட்ட வெளியீடு விண்ணப்பதாரர்கள் (ம) அரசுத்துறைகளுக்கு கீழ்க்கண்ட வகையில் உதவிகரமாக அமைகிறது.
  • விண்ணப்பதாரர்கள், இந்த ஆண்டுத்திட்டத்தின் மூலமாக எதிர்வரும் தேர்வுகளுக்கு தங்களை முன்னதாகவே தயார் செய்து கொள்ள ஏதுவாக அமையும்.
  • அரசுத் துறைகள். தங்கள் துறைகளுக்கு தெரிவு செய்யப்படும் பணியாளர்களுக்கான பயி[ற்சித் திட்டங்கள் உள்ளிட்ட மனிதவள ஆதார நிர்வாகம் குறித்தும் திட்டமிட்டுக் கொள்ளலாம்.
  • தேர்வாணையம். தனது ஆண்டுத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வுப்பணிகளை நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் நிறைவு செய்ய உதவிகரமாக அமையும்.

இணைய வழி விண்ணப்பமுறை

  • இனி வருங்காலங்களில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளுக்கும் இணைய வழி விண்ணப்பிக்கும் முறையை நடைமுறைப்படுத்த தேர்வாணையம் தீர்மானித்துள்ளது.
  • இணைய வழி விண்ணப்பப் படிவம் இரு மொழிகளில் இருப்பதுடன் பயன்பாட்டிற்கு எளிதாகவும், விண்ணப்பதாராpன் அடிப்படை மற்றும் முக்கிய விவரங்களைப் பதிவு செய்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • தேர்வுக்கட்டணத்தினை குறிப்பிட்ட அஞ்சலகங்களிலும், தமிழகத்தின் அனைத்து இந்தியன் வங்கிக் கிளைகளிலும் செலுத்தலாம். மேலும், இணைய வங்கி மூலமாக கடன் (ம) பண வரவு அட்டைகளை பயன்படுத்தியும் செலுத்தலாம்.
  • கிராமப்புறங்களில் வசிக்கும் விண்ணப்பதாரர்கள், இணையவழி மூலமாக விண்ணப்பிப்பதற்கு, தேர்வாணையம் மாநிலம் முழுவதிலும் குறைந்த பட்சம் [ 500 உதவி மையங்களை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

நிரந்தரப் பதிவு

  • ஒவ்வொரு விண்ணப்பதாராரும், தனது அடிப்படை விவரங்களை குறைந்த கட்டணத்தில் கையொப்பம் (ம) புகைப்படத்துடன் நிரந்தரமாகப் பதிவு செய்யும் முறையினை தேர்வாணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்பதிவானது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும்.
  • இப்பதிவினை விண்ணப்பதாரர்கள் தேவைப்படும் நேரத்திலும், புதிய தேர்விற்காக விண்ணப்பிக்கும் பொழுதிலும். மாற்றியமைக்க / திருத்தம் செய்யப் போதுமான வழிவகையும் செய்யப்பட்டுள்ளது. மேலும். விண்ணப்பதாரர்கள் தொடர்பான நிரந்தர தரவுதளம் தேர்வாணையத்தால் பராமரிக்கப்படும்.
  • இதனால், விண்ணப்பதாரர்கள் தங்களது இனம், கல்வித் தகுதி போன்ற அடிப்படைத் தகவல்களை ஒவ்வொரு புதிய பதவிக்கு விண்ணப்பிக்கும் பொழுதும் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு தங்கள் தேர்வு குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி (ம) மின்அஞ்சல் மூலமாக தெரிவிக்கப்படும்.

கலந்தாய்வு

  • கடந்த பிப்ரவரி 2012 முதல் தேர்வாணையம். பணி (ம) அலகு ஒதுக்கீட்டில் வெளிப்படைத் தன்மையினை ஏற்படுத்தும் பொருட்டு கலந்தாய்வு முறையினை அறிமுகப்படுத்தியுள்ளது. இக்கலந்தாய்வு முறையில் காலிப்பணியிடம் குறித்த விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.
  • தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு, அவரவர் விருப்பத்திற்கிணங்க நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப தகவல் தொழில்நுட்ப உதவியுடன் பணி மற்றும் அலகு ஒதுக்கீடு அப்பொழுதே செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளின் கலந்தாய்வின் இறுதியிலும், எஞ்சியுள்ள காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படும்.

கணினிமயமாக்கல்:

  • தேர்வாணையம், தேர்வு தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தையும் கணினிமயமாக்குவதன் மூலம் முழுமையான தேர்வு முறை மேலாண்மைத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது,
  • இதன் மூலம் பிழையற்ற முறையில். குறுகிய காலத்தில் தேர்வாணையத்தின் தெரிவுப் பணிகள் நிறைவடையும். மேற்காண்ட திட்டமானது, ஒரு தனியார் முகமையின் மூலம் தகவல் பாதுகாப்புத் தணிக்கைக்கும் உட்படுத்தப்படும்.

ஒற்றைச் சாளர முறை

தேர்வாணையம், தொடர்புடைய துறைகளிலிருந்து பெறப்படும் மாறுதல் வழி நியமனம் / பதவி உயர்வு வழி நியமனம் தொடர்புடைய கருத்துருவினைக் கூர்ந்தாய்வு செய்த பின்னர் துறை பதவி உயர்வக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பித்து, பதவி உயர்வினை வழங்குகிறது. இம்முறையில் தேர்வாணையம் ஒற்றைச் சாளர முறையினை அறிமுகப்படுத்தி செயல்படுத்துகிறது. அதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

  • அரசுத் துறைகள் தங்களது துறையின் இணைச் செயலாளர் / இயக்குநர் நிலையிலுள்ள உயரதிகாரிகளின் மூலமாக, மாறுதல் வழி நியமனம் / பதவி உயர்வு வழி நியமனம் தொடர்புடைய கருத்துருக்களை தேர்வாணையத்திற்கு நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும். அக்கருத்துருக்கள் தேர்வாணையத்தின் உயர் அலுவலர்களால் அன்றைய தினமே கூர்ந்தாய்வு செய்யப்படும்.
  • கூர்ந்தாய்வு செய்யப்பட்ட முழு வடிவத்திலான கருத்துருவானது தொடர் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும். இத்துறை தொடர்பான பதவி உயர்வு குழுக் கூட்டம் அடுத்து வரும் வாரத்தில் கூட்டப்படும்.
  • முழுவடிவம் பெறாத கருத்துருக்கள் திருத்தப்படவேண்டிய குறிப்புடன் மீள அனுப்பப்படும்.