ஆண்டுத் திட்டம் - 2024 தேர்வுகளின் திட்டம்

கடைசியாக திருத்தியமைக்கப்பட்ட நாள் : 17.08.2024
வ. எண் தேர்வின் பெயர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கை வெளியீட்டு நாள் தேர்வு தொடங்கும் நாள் நாட்களின் எண்ணிக்கை
1 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IV (தொகுதி-IV பணிகள் ) 6244 30.01.2024 09.06.2024 1
2 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதல்நிலை) தேர்வு - I (தொகுதி-I பணிகள்) 90 28.03.2024 13.07.2024 1
3 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதல்நிலை) தேர்வு தொகுதி-IB மற்றும் IC பணிகள்) 29 23.04.2024 12.07.2024 1
4 ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு - பட்டப் படிப்பு / முதுநிலை பட்டப் படிப்பு தரம் (நேர்முகத் தேர்வு பதவிகள் ) 108 15.05.2024 12.08.2024 3
5 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதல்நிலை) தேர்வு (தொகுதி-II மற்றும் IIA) 2327 20.06.2024 14.09.2024 1
6 ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள்தேர்வு - பட்டப் படிப்பு / முதுநிலை பட்டப் படிப்பு தரம் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள் ) 654 26.07.2024 14.10.2024 10
7 ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு - பட்டயம் / தொழிற்பயிற்சி தரம் 861 13.08.2024 09.11.2024 5
8 குற்ற வழக்கு தொடர்வுத் துறையில் அரசு உதவி வழக்கறிஞர், நிலை-II (முதல்நிலை தேர்வு) 50 13.09.2024 14.12.2024 1
9 ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு - பட்டப் படிப்பு / முதுநிலை பட்டப் படிப்பு தரம் (நேர்முகத் தேர்வு பதவிகள் ) - II 105 30.08.2024 18.11.2024 3
10 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி - VA பணி) 17 17.10.2024 04.01.2025 1
குறிப்பு :
  1. தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்திக்கொள்வதற்காக மட்டும் இந்த உத்தேச ஆண்டுத் திட்டம் வெளியிடப்படுகிறது.
  2. உத்தேச ஆண்டுத் திட்டத்தில் தேர்வுகள் சேர்க்கவோ அல்லது நீக்கவோ செய்யப்படலாம்.
  3. குறிப்பிடப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தேர்வுக்கு முன்னரோ அல்லது பின்னரோ மாற்றங்களுக்கு உட்பட்டது.
  4. தேர்வுகளுக்கான பாடத் திட்டமானது தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இவை அறிவிக்கை வெளியிடும் நாள்வரை மாற்றங்களுக்கு உட்பட்டது.
  5. அறிவிக்கை தொடர்பான விவரங்களுக்கு தேர்வாணைய இணையதளத்தினை தொடர்ந்து கவனித்து வரவும்.