பொறுப்பாகாமை குறிப்பு

மேம்படுத்தப்பட்ட மற்றும் துல்லியமான தகவல்களை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தளத்தின் உள்ளடக்கங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பற்றிய பொது தகவல்களை விண்ணப்பதாரர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கும் நோக்கத்திற்காக மட்டுமே உள்ளன. பிழைகள், தெரிவிக்கப்படும் பட்சத்தில் சரி செய்யப்படும். இதில் தெரிவிக்கப்பட்டுள்ள எதுவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயல்திறன் குறித்த எந்தவிதமான உத்தரவாதத்தையோ வாக்குறுதியையோ கொண்டிருக்காது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்த இணையதளத்தில் உள்ள பொருட்களின் உண்மைத்தன்மைக்கு எந்தவித பொறுப்பையும் ஏற்காது. இதன் பொருட்டு, பயனர்கள் மற்றும் தொடர்புடைய ஏனையோர் அனைவரும் இதில் கூறப்பட்டுள்ள தகவல்களின் உண்மைத்தன்மையை உரிய அலுவலரிடமிருந்து உறுதிசெய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த இணையதளத்தின் உள்ளடக்கங்கள், பொதுமக்கள் விரைவாகவும் எளிதாகவும் தகவல்களை அணுகுவதற்காக மட்டுமே உள்ளன. துல்லியமான மற்றும் மேம்படுத்தப்பட்ட தகவல்களை வழங்குவதற்காக எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், தொலைபேசி எண்கள், பதவி வகிக்கும் அதிகாரியின் பெயர் போன்ற விவரங்கள் இணையதளத்தில் புதுப்பிக்கப்படும் முன் மாறக்கூடும். எனவே, இந்த இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கங்களின் முழுமை, துல்லியம் அல்லது பயன்தன்மைக்கு எங்களால் எந்தவித சட்டப்பூர்வ பொறுப்பையும் ஏற்க இயலாது.

சில ஆவணங்களில் பிற தளங்களுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அத்தளங்களில் உள்ள உள்ளடக்கங்களின் உண்மைத்தன்மைக்கு நாங்கள் பொறுப்பல்ல. பிற தளங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஹைப்பர்லிங்குகள் அத்தளங்களில் வழங்கப்படும் தகவல், பொருள்கள் அல்லது சேவைகளை அங்கீகரிப்பதற்காக இல்லை .

எங்களின் சிறந்த முயற்சிகளுக்கு பிறகும், இத்தளத்தில் உள்ள ஆவணங்கள் கணினி வைரஸ்களால் பாதிக்கப்படாதவை என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கவில்லை.

எங்கள் தளத்தை மேம்படுத்த உங்கள் பரிந்துரைகளை வரவேற்கிறோம் மற்றும் ஏதேனும் பிழை கண்டறியப்பட்டால் எங்களுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எங்கள் தளத்தைப் பார்வையிட்டதற்கு நன்றி.

ஒருங்கிணைப்புக் குழு (இணையதள பராமரிப்பு), தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.