1 வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்து கொள்ள வேண்டிய கால அளவு ? தண்டனை ஆணை பெறப்பட்ட 60 நாட்களுக்குள்
2. 17(பி) பிரிவின் கீழ் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் என்ன ? தமிழ்நாடு குடிமுறை பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் குறிப்பிட்டுள்ளவாறு
3. விசாரணை அறிக்கை குற்ற அலுவலருக்கு அனுப்பி அதன் மீது கூடுதல் விளக்கம் பெறப்படவேண்டுமா ? ஆம்
4 குற்ற அலுவலர் ஆவணங்களைப் பார்வையிட அனுமதி வழங்கலாமா ? ஆம். குற்ற அலுவலர் ஆவணஙகளை பார்வையிட அனுமதிக்கலாம்.
5 அரசுக்கு நேரடியாக மேல்முறையீடு செய்து கொள்ளலாமா ? இல்லை, துறை தலைவர் மூலமாக மட்டும்.
6 மேல்முறையீடு / மறு ஆய்வு மனுவினை தீர்வு செய்ய கால அளவு மேல் அனுப்பும் அலுவலரிடம் (Forwarding Authority) இருந்து பெறப்பட்ட 6 மாத கால அளவுக்குள்
7 சீராய்வு மனுவிற்கும் மறு ஆய்வு மனுவிற்கும் உள்ள வேறுபாடு என்ன ? பிறிதொரு அலுவலரால் பிறப்பிக்கப்படும் ஆணையினை ஆய்வு செய்தல் சீராய்வாகும்,
அரசே ஆணை பிறப்பிக்கும் இனங்களை அரசே மீண்டும் ஆய்வு செய்தல் மறு ஆய்வு ஆகும்.
8 மறு ஆய்வு செய்யும் அதிகாரம் யாருக்கு உரியது ? மறு ஆய்வு செய்யும் அதிகாரம் அரசுக்கே உரியது
9 சீராய்வு செய்ய கால அளவு அரசு மற்றும் துறைத் தலைவர்களுக்கு கால அளவு இல்லை.
மேல்முறையீடு செய்யும் அலுவலர் 6 மாதங்களுக்குள்.
10 தமிழ்நாடு குடிமுறை பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் 17(ஆ)ன் கீழ் வழங்கப்படும் குற்றச்சாட்டுக் குறிப்பாணையுடன் வினாப் படிவம் இணைத்தனுப்பப்பட வேண்டுமா? ஆம்.
11 ஒழுங்கு நடவடிக்கை வழக்கின் விசாரணையின் போது ஓய்வு பெற்ற அரசு அலுவலரின் உதவியினைப் பெற அனுமதி உண்டா? ஆம்.
12 ஓர் அரசு அலுவலர் இறந்துவிட்டால் அவர் மீது நிலுவையிலுள்ள ஒழுங்கு நடவடிக்கையின் நிலை என்ன ? அரசு அலுவலர் இறக்க நேரிட்டால் அவர் மீது நிலுவையிலுள்ள ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்படும்
13 ஓய்வு பெற்ற அரசு அலுவலரின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இயலுமா ? ஆம். ஆனால், குற்ற நிகழ்வு நடைபெற்று 4 ஆண்டுகள் கடந்த நிலையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இயலாது