குறிப்புகள் தயாரிப்பதற்கான சரிபார்ப்புப் படிவம்
1. | பதவி மற்றும் பணியின் பெயர் |
2. | எந்த வருடத்திற்கான பட்டியல் முந்தைய பட்டியலை தொடர்ந்துள்ளதா? |
3. | அ. அறுதி நாள் (Crucial date) ஆ. பட்டியல் காலம் இ. 5 ஆண்டு சரிபார்ப்புப் காலம் |
4. | காலிப் பணியிட எண்ணிக்கை (காலியிட மதிப்பீட்டு படிவமும் காலியிட மதிப்பீட்டு ஏற்பளிப்பு ஆணை நகலும் இணைக்கப்பட வேண்டும்) குறிப்பு பட்டியல் காலம் முடிந்து விட்டால் முறையான காலிப் பணியிடம் மட்டும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். |
5. | அறுதி நாளின்படியான பணிவிதிகளின்படி (ஏற்பளிக்கப்பட்ட விதிகளின் நகல் இணைக்கப்பட வேண்டும். அ. பணியமர்த்தும் முறை ஆ. தகுதி இ. இட ஒதுக்கீடு முறை பொருந்துமா (ஆம் அல்லது இல்லை) (ஆம் எனில் விவரங்கள் கொடுக்கப்பட வேண்டும்) |
6. | அறுதி நாளின்படி? பணி பட்டியல் அளிக்கப்பட்டுள்ளதா? (அரசாணை (நிலை) எண்.368/ நாள் 18.10.1993-இல் உள்ளவாறு இருக்க வேண்டும். |
7. | முந்தைய பட்டியலில் ஏற்பளிக்கப்பட்ட கடைசி அலுவலரின் பெயர் (முந்தைய பட்டியல் வெளியிடப்பட்ட அரசாணை நகல் இணைக்கப்பட வேண்டும். |
8. | தகுதி பெறாத (Not qualified) அலுவலர் விவரம் அ. முந்தைய பட்டியலுக்கு தகுதி பெறாதவர் ஆ. தற்போதைய பட்டியலுக்கு தகுதி பெற்றுள்ளனரா? |
9. | முந்தைய பட்டியலில் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக தள்ளி வைக்கப்பட்பட்டோர் (Deferred),/ விவரம் ஒழுங்கு நடவடிக்கையின் தற்போதைய நிலை |
10. | அ. முந்தைய பட்டியலில் சேர்க்க பொருத்தமற்றவராக (Not Fit) கருதப்பட்டோர் விவரம் ஆ. தற்போதைய பட்டியலில் கருதப்படகூடியவரா? |
11. | குழுவின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய மொத்த அலுவலர்களின் எண்ணிக்கை (முதுநிலைப் பட்டியல் வ.எண்…........ முதல் ...... வரை) (தகுதி பெற்றுள்ள அனைத்து அலுவலர்களுக்கும் படிவம்/2/இல் விபரங்கள் அளிக்கப்பட வேண்டும்) |
12. | அவர்களுள்/ அ. தகுதி பெறாதோர் (Not qualified) ஆ. தற்காலிக பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெற்றவர்கள் இ. தற்காலிக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றவர்கள் ஈ. பதவி உயர்வு துறப்பு செய்தோர் , பதவி விலகியோர் விவரம் (ஏற்பளிக்கப்பட்ட ஆணையின் நகல் இணைக்கப்பட வேண்டும்) உ. ஒழுங்கு நடவடிக்கை விதி 17 (ஆ)/ வின்படி; குற்றச்சாட்டு நிலுவை காரணமாக தற்போதைய கருத்துருவில் தள்ளி வைக்கப்பட வேண்டியோர் விவரம்? குற்றச்சாட்டு குறிப்பாணை நகல் இணைக்கப்பட வேண்டும் |
13. | குறிப்பிட்ட படிவத்தினுடனான கூடுதல் விவரங்கள் (Additional particulars to Format-I) |
14. | துறைத்தலைவரின் பரிந்துரை உள்ளதா? அரசின் நிர்வாகத் துறை பரிந்துரை உள்ளதா? பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் பரிந்துரை உள்ளதா? |
15. | குறிப்புகடங்கிய விவரங்களும்? பதிவெண்களும் சான்றிடப்பட்டுள்ளதா |
16. | கருத்துரு குறிப்ழுகள் (Booklets) 5 நகல்கள் பெறப்பட்டுள்ளதா? |
17. | அலுவலர்களின் பதிவுருத்தாள் , மந்தணக்கோப்பு இணைக்கப்பட்டுள்ளதா? |
18. சான்றுகள்
- 1. இக்கருத்துருவில் விதிகளின்படி தகுதி பெற்ற அனைவரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன என்றும், தகுதியுடைய எவர் பெயரும் விடுபடவில்லை என்றும் சான்றளிக்கப்படுகிறது.
- 2. இன்றைய நாளில் நடைமுறையில் உள்ள அறிவுரைகளுக்கிணங்க காலியிட மதிப்பீடு கணக்கிடப்பட்டுள்ளது.
- 3. அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை விவரங்கள் விடுபடாமல் அவரவர் பதிவுறுத்தாளில் பதியப்பட்டுள்ளன. மந்தணக்கோப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
- 4. முதுநிலை பட்டியலில் உள்ள அலுவலர்களின் பெயர்கள் முதுநிலை வரிசைப்படி சரியாக உள்ளன.
- 5. ஊட்டு வகைப் பதவியில் உள்ள முறையான பணியாளர்களில் தகுதி காண் பருவம் முடியாதவர்கள் (Approved Probationers) மட்டும் கருத்துருவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.