தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அமைப்பு இந்திய அரசியலமைப்புச் சட்ட விதி எண் 316 முதல் 319 வரையில் விளக்கப்பட்டுள்ளது. தற்பொழுது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாகவும் அவர்கள் அனைவரும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்டு தமிழக ஆளுநரால் நியமனம் செய்யப்படுபவர்களாகவும் உள்ளனர்.
அமைப்பு
தற்போதைய தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பின்வருமாறு:
பதவியின் பெயர் | |
---|---|
மாண்புமிகு தலைவர் | |
மாண்புமிகு உறுப்பினர் | |
மாண்புமிகு உறுப்பினர் | |
பேராசிரியர். க. ஜோதி சிவஞானம், M.A., M.Phil., Ph.D., |
|
மாண்புமிகு உறுப்பினர் | |
முனைவர். க. அருள்மதி, M.Sc., Ph.D., |
|
மாண்புமிகு உறுப்பினர் | |
அருட்பணி. ஆ. ராஜ் மரியசூசை, B.A., B.Ph., M.A., |
பதவி | பெயர் | பதவி ஏற்ற நாள் | ||
---|---|---|---|---|
மாண்புமிகு தலைவர் | திரு. எஸ். கே. பிரபாகர், இ.ஆ.ப | 23.08.2024 | ||
மாண்புமிகு உறுப்பினர் | பேராசிரியர். க. ஜோதி சிவஞானம், M.A., M.Phil., Ph.D., | 15.07.2021 | ||
மாண்புமிகு உறுப்பினர் | முனைவர். க. அருள்மதி, M.Sc., Ph.D., | 14.07.2021 | ||
மாண்புமிகு உறுப்பினர் | அருட்பணி. ம. ஆரோக்கிய ராஜ், B.A., B.Ph., M.A., | 15.07.2021 | ||
மாண்புமிகு உறுப்பினர் | திரு. ம. ப. சிவன் அருள், இ.ஆ.ப (ஓய்வு) | 19.02.2024 | ||
மாண்புமிகு உறுப்பினர் | திரு.இரா. சரவணகுமார், இந்திய வருவாய்ப்பணி (ஓய்வு) | 01.03.2024 | ||
மாண்புமிகு உறுப்பினர் | மருத்துவர் (திருமதி) அ. தவமணி, எம்.பி.பி.எஸ் | 19.02.2024 | ||
மாண்புமிகு உறுப்பினர் | திருமதி. உஷா சுகுமார், பி.ஏ. (பொருளாதாரம்) | 19.02.2024 | ||
மாண்புமிகு உறுப்பினர் | முனைவர். திரு. இரா. பிரேம் குமார், MFC, MBA, PGDIB, PTM, Ph.D. | 19.02.2024 |
தேர்வாணையம் பல்வேறு பணிகள் தொடர்புடைய விதிகள், கோட்பாடுகள் பின்பற்றத்தக்க வழிமுறைகள் மற்றும் முடிவுகளை வேகமாக மற்றும் திறம்பட எடுப்பதில் அரசுக்கு தனது முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது.
தேர்வாணையம் எடுக்கின்ற முடிவுகளை நடைமுறைப்படுத்துவது, அலுவலக நிர்வாகம், துறை பதவி உயர்வுக்குழு தொடர்புடைய பணிகளை நிர்வகிப்பது மற்றும் நேர்காணல் தேர்வு மற்றும் நியமனத்திற்கான பணிகளை மேற்கொள்வது ஆகியவற்றை பொறுப்பேற்று நடத்துவதில் செயலாளர் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்.
போட்டித் தேர்வுகள் மற்றும் துறைத்தேர்வுகள் தொடர்பான அனைத்து வித பணிகளையும் மேற்கொள்வதில் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்.
தற்போதைய தேர்வாணையத்தின் செயலர் மற்றும் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் பின்வருமாறு:
பெயர் | பதவியின் பெயர் | பதவி ஏற்ற நாள் | |
---|---|---|---|
திரு.ச.கோபால சுந்தர ராஜ், இ.ஆ.ப., | செயலாளர் | 11.12.2023 | |
திரு. அ. ஜான் லூயிஸ், இ.ஆ.ப., | தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் | 01.08.2024 |
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் உள்ள துறைகள் அனைத்தும் இணைச் செயலர், துணைச் செயலர்கள் மற்றும் சார் செயலர்கள் தலைமையிலும். ஒவ்வொரு பிரிவுகளும் பிரிவு அலுவலரின் கீழ் இதர சார்நிலைப் பணியாளர்களைக் கொண்டும் இயங்கி வருகின்றன.