இசைவு வழங்குதலில் தேர்வாணையத்தின் பங்கு
-
பணி வரன்முறை
- தேர்வாணைய உள்ளீட்டெல்லைக்குள் தொகுப்பூதியத்தில் தற்காலிகப் பணியிலிருக்கும் இளநிலை உதவியாளர்கள். தட்டச்சர்களாகப் பணிபுரிபவர்களின் பணியினை அரசாணை (நிலை) எண் 248. வருவாய்த்துறை நாள் 23.03.1993 இன் படி வரன்முறைப்படுத்த தேர்வாணைய இசைவு வழங்குதல்.
- 1991 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் திட்டத்தில் பணிபுரிந்து பணியிழப்புக்குள்ளாகி உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியினை வரன்முறைப்படுத்த தேர்வாணைய இசைவு வழங்குதல்.
- சில கழகங்கள் அரசுத் துறைக்கு ஈர்த்துக் கொள்ளப்படும் நிலைகளில் அவற்றில் பணியாற்றும் நபர்களின் பணியினை வரன்முறைப்படுத்த தேர்வாணைய இசைவு வழங்குதல்.
- 14.01.1980 மற்றும் அதற்கு முன்னர் கிராம அலுவலர்களாகப் பணியிலிருந்தோரை கிராம நிர்வாக அலுவலர் பதவியில் அரசாணையின்படி பணி வரன்முறைப்படுத்துதல்.
-
துறை/ அலகு மாறுதலில் செல்ல
ஒரு துறையிலிருந்து / அலகிலிருந்து மற்றொரு துறைக்கு/ அலகிற்கு மாறுதலில் செல்ல தனியரின் பொருட்டு தமிழ்நாடு அமைச்சுப்பணி விதிகளின் விதி 20(a) (iii) இன் படி தேர்வாணைய இசைவு வழங்குதல்.
-
தேர்ந்தோர் பட்டியல்
- ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறைகளில் உள்ள அலுவலக உதவியாளர்கள், பதிவறை எழுத்தர்கள், இரவுக்காவலர்கள், ஊராட்சி உதவியாளர்கள் மற்றும் பிற கீழ்நிலைப் பதவிகளில் உள்ளோரை 10%, 20% இடஒதுக்கீட்டின்படி இளநிலை உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்குவதற்கான தேர்ந்தோர் பட்டியலுக்கு தேர்வாணைய இசைவு வழங்குதல்.
- தமிழ்நாடு நகராட்சி பொதுப் பணியின் கீழ்வரும் நிலை- 1 மற்றும் 2 ஆக பணியாற்றும் நகராட்சிப் பணியாளர்களை நகராட்சி ஆணையர் தரம்- 2 ஆக பணிமாறுதல் மூலம் தெரிவு செய்தல்.