ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - II IN 
தொகுதி II மற்றும் IIA பணிகள்

DOE : 28/09/2025

Tentative Keys Hosted on 07/10/2025



குறிப்பு:

  • இங்கு பதிவேற்றம் செய்யப் பட்டுள்ள மாதிரி வினாத்தாளின் ஒவ்வொரு வினாவிற்கும், கொடுக்கப் பட்ட விடைகளுள் சரியான விடை குறியீடு மூலம் குறித்துக் காட்டப் பட்டுள்ளது.
  • தேர்வின் போது தேர்வர்களுக்கு எந்த குறியீட்டைக் கொண்ட வினாத்தாள் வழங்கப்பட்டிருந்தாலும், தற்போது தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ள மாதிரி வினாத்தாள் தொகுப்பில் உள்ள கேள்விகளின் வரிசை எண் படியே தேர்வர்கள் தங்களது மறுப்பினைத் தெரிவிக்க வேண்டும்.
  • உத்தேச விடைகளுக்கான மறுப்புகள் / கருத்துகள் ஆகியவற்றை ஏழு நாட்களுக்குள் இணைய வழியில் மட்டுமே www.tnpsc.gov.in மூலமாக தெரிவிக்க வேண்டும்.
  • அஞ்சல் வழியாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
  • 14.10.2025 அன்று மாலை 5.45 மணிக்கு பிறகு இணைய வழியில் பெறப்படும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட மாட்டாது.
  • இறுதி செய்யப்பட்ட விடைகள், தெரிவுப் பணிகள் அனைத்தும் முடிவுற்ற பிறகு தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் வினா எண் 93 (பொது ஆங்கிலம்) மற்றும் 101 (பொது அறிவு) ஆகிய வினாக்களைத் தவிர்த்து அனைத்து வினாக்களுக்கும் தங்கள் மறுப்பினைத் தெரிவிக்கலாம். மேற்கண்ட வினாக்களை வல்லுநர் குழுவின் முன் வைக்க தேர்வாணையம் ஏற்கனவே முடிவெடுத்துள்ளது. எனினும், விண்ணப்பதாரர்கள் வினா எண் 93 (பொது ஆங்கிலம்) மற்றும் 101 (பொது அறிவு)ஆகிய வினாக்களுக்குத் தங்கள் கருத்தினைத்  தகுந்த ஆதாரங்களுடன் தெரிவிக்கலாம்.
  • பகுதி பொதுத் தமிழ் – வினா எண் 37 முதல் 41 வரையுள்ள உத்தேச விடைகளுக்கான மறுப்புகள் / கருத்துகள் வினா எண்  37- க்கு மேலே கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து தெரிவிக்க வேண்டும்.
  • பகுதி - பொது ஆங்கிலத்தில் வினா எண் 62 முதல் 64 வரையுள்ள உத்தேச விடைகளுக்கான மறுப்புகள் / கருத்துகள் வினா எண்  62- க்கு மேலே கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து தெரிவிக்க வேண்டும்.