தற்போதுள்ள முறையில் கடிதப் போக்குவரத்தில் ஏற்படும் காலவிரயத்தைத் தவிர்க்கும் நோக்கில் 22.02.2012 முதல் ஒற்றைச் சாளர முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

  • இதன்படி, குழுவின் கூட்டத்தில் வைக்கப்பட வேண்டிய கருத்துருவை அரசுத் துறைகளின் இரண்டாம் நிலை அலுவலர்கள் நேரில் கொண்டு வந்து தேர்வாணைய செயலாளரிடம் நேரில் அளிக்க வேண்டும். அக்கருத்துருக்களை அன்றே ஆய்ந்து முழுமையாக உள்ள கருத்துருக்கள் மட்டும் ஏற்கப்பட்டு, அடுத்துவரும் வாரத்தில் பதவி உயர்வுக் குழுவின் கூட்டத்தை கூட்ட பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
  • முழுமையாக இல்லாத குறைபாடுடைய கருத்துருக்கள் ஏற்கப்படாமல் குறைகள் சுட்டிக்காட்டப்பட்டு சரிசெய்து கொண்டுவரும் பொருட்டு அன்றே திருப்பியளிக்கப்பட்டுவிடும்.
  • ஒற்றைச்சாளர முறை 22.02.2012 முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் பகல் 11.00 மணி முதல் 2.00 மணி வரை செயல்பட்டு வருகிறது.

சரிபார்ப்புப் படிவம்:

கருத்துருவை முழுமையாக தயார் செய்வதற்கு ஏதுவாகவும்? விடுபாடுகளை தவிர்க்கவும் சாரிபார்ப்புப் படிவம் ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.