சரிபார்ப்புப் படிவம்:

கருத்துருவை முழுமையாக தயார் செய்வதற்கு ஏதுவாகவும் விடுபாடுகளை தவிர்க்கவும் சாரிபார்ப்புப் படிவம் ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கருத்துருக்கள் தயாரிப்பதற்காகவும் குழுவில் பின்பற்றத் தக்கதுமான வழிமுறைகள்:

18.10.1993 நாளிட்ட பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் அரசாணை (நிலை) எண்.368-இல் வெளியிடப்பட்டு அவ்வப்போது வெளியிடப்பட்டுவரும் திருத்தங்ளுக்கிணங்க வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

வாராந்திர அட்டவணை

ஒவ்வொரு வாரமும் அந்த வாரத்தில் நடத்தப்படவிருக்கும் துறை பதவி உயர்வுக் கூட்டங்களின் விவரங்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் தனியான அட்டவணையில் திஙகட்கிழமைதோறும் வெளியிடப்படும்.