கருணையடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டோரது பணிவரன்முறைப்படுத்த தேர்வாணைய இசைவு பெற சமர்ப்பிக்கப்பட வேண்டிய அசல் சான்றுகள்/ ஆவணங்கள்

    • (அ)காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவி-கணவர் தனக்கு/ விண்ணப்பதாரருக்கு பணி நியமனம் கோரிஅரசுக்கு விண்ணப்பித்த கடிதம்
    • (ஆ)விண்ணப்பதாரர் பணிநியமனம் கோரி விண்ணப்பித்தக் கடிதம்
  1. விண்ணப்பதாரரது பணி நியமன ஆணை நகல் (மேலொப்பமிடப்பட்டது)
  2. அரசுக் கடிதம் எம்.எஸ்.எண்.31. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை நாள் 25.02.1994இல் தெரிவித்துள்ளவாறு பதினெட்டு பத்திகளடங்கிய நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் தேவையான விவரங்கள்
  3. நிர்ணயிக்கப்பட்ட படிவத்துடன் அரசாணை எண்.29. வேலைவாய்ப்பு நாள் 7.03.88ல் தெரிவித்துள்ளவாறு விண்ணப்பதாரரின் உறுதிமொழிச் சான்று
  4. காலஞ்சென்ற அரசு ஊழியரின்  இறப்புச் சான்றிதழ்
  5. காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுச் சான்றிதழ்
  6. விண்ணப்பதாரருக்குப் பணி நியமனம் அளிக்கப்படுவதால் ஆட்சேபணை இல்லை என்பதற்கான ஏனைய வாரிசுதாரர்களின் மறுப்பின்மைச் சான்றிதழ்கள்
  7. காலஞ்சென்ற அரசு ஊழியரின் குடும்பத்தில் வேறு எவரும் அரசுத் துறையில்/ தனியார் துறையில் பணியில் இல்லை என்பதற்கான சான்றிதழ்
  8. காலஞ்சென்ற அரசு ஊழியரின் குடும்பம் வறிய நிலையில் உள்ளது என்பதற்கான சான்றிதழ்
  9. காலஞ்சென்ற அரசு ஊழியரின் குடும்ப வருமானச் சான்றிதழ்
  10. காலஞ்சென்ற அரசு ஊழியரின் குடும்ப சொத்துச் சான்றிதழ் அசையும்/ அசையா சொத்துக்கள்
  11. தனியர் பணியில் சேர்ந்த நாளன்று மறுமணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கான சான்று
  12. விண்ணப்பதாரரது கல்வித்தகுததி சான்று
  13. கல்விச் சான்றின் மெய்த்தன்மை சான்று
  14. தொழில்நுட்ப கல்விச் சான்று
  15. தொழில்நுட்ப கல்விச் சான்றின் மெய்த்தன்மை சான்று
  16. காலஞ்சென்ற அரசுப் பணியாளர் 26.06.1995க்குப் பிறகு காலமாகியிருந்தால் அவர் காலமான நாளிலிருந்து அவர் வாரிசுதாரர் 3 ஆண்டுகளுக்குள் பணி நியமனம் கோரி விண்ணப்பித்துள்ளார் என்கிற விவரம் (அரசாணை எண்.120. தொ(ம)வே.வா.துறை. 26.06.95)
  17. இ.நி.உ/ தட்டச்சராக பணிபுரிய விருப்பக் கடிதம்
  18. விண்ணப்பதாரரது பணிப் பதிவேட்டின் முதல் பக்கம் மற்றும் பணியேற்ற நாள் குறிப்பிடப்பட்ட மேலொப்பமிடப்பட்ட நகல்
  19. காலஞ்சென்ற அரசு ஊழியரது பணிப்பதிவேட்டில் அன்னாரின் பிறந்த நாள் குறிப்பிடப்பட்ட முதல் பக்கம் மற்றும் அவர் வகித்த பதவியில் அன்னார் பணிவரன்முறை செய்யப்பட்ட நாள் ஆகிய விவரங்கள் குறிப்பிடப்பட்ட பக்கங்களின் (மேலொப்பமிடப்பட்ட நகல்கள்)