1 | வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்து கொள்ள வேண்டிய கால அளவு ? | தண்டனை ஆணை பெறப்பட்ட 60 நாட்களுக்குள் |
2. | 17(பி) பிரிவின் கீழ் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் என்ன ? | தமிழ்நாடு குடிமுறை பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் குறிப்பிட்டுள்ளவாறு |
3. | விசாரணை அறிக்கை குற்ற அலுவலருக்கு அனுப்பி அதன் மீது கூடுதல் விளக்கம் பெறப்படவேண்டுமா ? | ஆம் |
4 | குற்ற அலுவலர் ஆவணங்களைப் பார்வையிட அனுமதி வழங்கலாமா ? | ஆம். குற்ற அலுவலர் ஆவணஙகளை பார்வையிட அனுமதிக்கலாம். |
5 | அரசுக்கு நேரடியாக மேல்முறையீடு செய்து கொள்ளலாமா ? | இல்லை, துறை தலைவர் மூலமாக மட்டும். |
6 | மேல்முறையீடு / மறு ஆய்வு மனுவினை தீர்வு செய்ய கால அளவு | மேல் அனுப்பும் அலுவலரிடம் (Forwarding Authority) இருந்து பெறப்பட்ட 6 மாத கால அளவுக்குள் |
7 | சீராய்வு மனுவிற்கும் மறு ஆய்வு மனுவிற்கும் உள்ள வேறுபாடு என்ன ? | பிறிதொரு அலுவலரால் பிறப்பிக்கப்படும் ஆணையினை ஆய்வு செய்தல் சீராய்வாகும், அரசே ஆணை பிறப்பிக்கும் இனங்களை அரசே மீண்டும் ஆய்வு செய்தல் மறு ஆய்வு ஆகும். |
8 | மறு ஆய்வு செய்யும் அதிகாரம் யாருக்கு உரியது ? | மறு ஆய்வு செய்யும் அதிகாரம் அரசுக்கே உரியது |
9 | சீராய்வு செய்ய கால அளவு | அரசு மற்றும் துறைத் தலைவர்களுக்கு கால அளவு இல்லை. மேல்முறையீடு செய்யும் அலுவலர் 6 மாதங்களுக்குள். |
10 | தமிழ்நாடு குடிமுறை பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் 17(ஆ)ன் கீழ் வழங்கப்படும் குற்றச்சாட்டுக் குறிப்பாணையுடன் வினாப் படிவம் இணைத்தனுப்பப்பட வேண்டுமா? | ஆம். |
11 | ஒழுங்கு நடவடிக்கை வழக்கின் விசாரணையின் போது ஓய்வு பெற்ற அரசு அலுவலரின் உதவியினைப் பெற அனுமதி உண்டா? | ஆம். |
12 | ஓர் அரசு அலுவலர் இறந்துவிட்டால் அவர் மீது நிலுவையிலுள்ள ஒழுங்கு நடவடிக்கையின் நிலை என்ன ? | அரசு அலுவலர் இறக்க நேரிட்டால் அவர் மீது நிலுவையிலுள்ள ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்படும் |
13 | ஓய்வு பெற்ற அரசு அலுவலரின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இயலுமா ? | ஆம். ஆனால், குற்ற நிகழ்வு நடைபெற்று 4 ஆண்டுகள் கடந்த நிலையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இயலாது |